மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு! சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Report Print Gokulan Gokulan in காலநிலை
79Shares

மேல்கொத்மலை நீர்ததேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காணப்படுவதுடன், நீரேந்தும் பகுதிகளில் நீரோட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதுடன் சென்கிளேயர் நீர்வீழ்ச்சி பெருக்கெடுத்துள்ளது.

இதனால் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று அதிகாலை திறந்து விடப்பட்டுள்ளன.

நுவரெலியா - அட்டன், அட்டன் - கொழும்பு உள்ளிட்ட பிரதான வீதிகளில் பனி மூட்டம் அதிகரித்து காணப்படுவதால், சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்தோடு, நீர்த்தேகத்தின் கரையோர பகுதியில் உள்ளவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அனர்ந்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.