இலங்கையின் வானிலையில் நாளை சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்தில் பிற்பகல் 02.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்கள் மற்றும் மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் 40 முதல் 50 கி.மீற்றர் வேகத்தில் அதிகரிக்கக்கூடும்.
இதேவேளை கடல் அலைகளின் தாக்கத்தால் தென்னிலங்கையின் பேருவளையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான காலி வீதியில் கடல்நீர் வரக்கூடும்.
எனவே இது குறித்து கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு வானிலை மையம் கேட்டுள்ளது.