இலங்கையின் வானிலையில் அடுத்த சில நாட்களில் மழை அதிகரிக்கும்!

Report Print Ajith Ajith in காலநிலை
145Shares

இலங்கையின் வானிலையில் அடுத்த சில நாட்களில் மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

ஊவா , கிழக்கு, வட-மத்திய, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேல் , வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.

அத்துடன் வட-மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காற்றின் வேகம் 40 கி.மீ வேகம் வரை அதிகரிக்கக்கூடும் என்று வானிலை துறை தெரிவித்துள்ளது.