வெள்ளத்தில் மூழ்கிய காலி - போக்குவரத்து நடவடிக்கை பாதிப்பு

Report Print Vethu Vethu in காலநிலை
98Shares

கடந்த 24 மணித்தியாலத்தில் காலி மாவட்டத்தில் அதிக மழை பெய்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது..

அங்கு 295 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக காலி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக காலி பந்தேகம வீதியின், தங்கெதர, பெலிகஹா, கஹதுவவத்த, பெட்டிகலவத்த, மிலிந்துவ ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

வீதிகள் நீரில் மூழ்கியுள்ளமையினால் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.