காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Report Print Vethu Vethu in காலநிலை
219Shares

நாட்டில் பல பகுதிகள் இன்றைய தினம் அடை மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

மேல் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்ய கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்திலும், அம்பாறை மாவட்டத்திலும் மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மின்னல் மற்றும் தற்காலிக காற்றில் ஏற்படும் ஆபத்தை தடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

விசேடமாக வடக்கு, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டு பகுதிகளிலும் கடும் காற்று வீசக்கூடும் என திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.