தலைமன்னாரில் பலத்த காற்று காரணமாக ஏற்பட்ட மின்சார தடை

Report Print Ashik in காலநிலை

தலைமன்னாரில் பாரிய புளிய மரம் ஒன்று பலத்த காற்று காரணமாக தூரோடு சரிந்து வீழ்ந்துள்ளமையினால் அந்தப் பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

தலைமன்னார் வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள மரியாள் வீதியில் அமைந்துள்ள கன்னியர் மடத்தின் வளாகத்திலே இச் சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மரம் அருகில் நின்ற தென்னை மரத்தையும் முறித்து வீதியின் எதிர் பக்கமுள்ள வீட்டின் கூரை மீது விழுந்துள்ளது.

இதன் காரணமாக வீட்டிற்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் குறித்த பகுதிக்கான மின்சாரம், தொலைத்தொடர்பு இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

மேலும் குறித்த பகுதிக்கு வந்த மின்சார சபை அதிகாரிகள் மின்சாரத்தை துண்டித்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.