வானிலை தொடர்பில் இன்றைய தினம் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

Report Print Kanmani in காலநிலை

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி தேசமானிய மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் .

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில் வங்காள விரிகுடாவின் கிழக்குப் பகுதியின் மத்தியில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதன் தாக்கத்தின் காரணமாக வட அந்தமான் கடல் பிராந்தியத்திலும் அத்துடன் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் கிழக்கு பகுதியிலும் இன்று முதல் பலத்த காற்றும் கனத்த மழையும்பெய்யக்கூடும். இதேவேளை இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆகையினால் எதிர்வரும் 12 ம் திகதிவரையில் கடல் சார் ஊழியர்களும் மீனவ சமூகத்தினர்களும் குறிப்பிட்ட கடல் பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், புத்தளம், கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களிலும் அத்துடன் மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 55_60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசுவதுடன் அவ்வேளைகளில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் .

இதேவேளை காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50_55 km இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்துக் காணப்படும் .இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக்கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பானபான நிலையில் காணப்படும் .