நாட்டின் காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்!

Report Print Kanmani in காலநிலை

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி தேசமானிய மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 mm வரை யிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட மாகாணத்திலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மத்திய மலைப்பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும் மணத்தியாலத்திற்கு 50_60 km வேகத்தில் அடிக்கடி காற்று ஊடறுத்து வீசக்கூடும்.

கடல் பிராந்தியங்களில்

வட அந்தமான் கடல் பிராந்தியத்திலும் வங்காள விரிகுடா வின் கிழக்குப் பகுதியின் மத்தியிலும் இணைந்து காணப்படுகின்ற தாழ் அமுக்கப் பிரதேசமானது அடுத்து வரும் 24 மணித்தியாலங்களில் தாழ் அமுக்கமாக தீவிரமடைந்து மேற்கு வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்லும்.

இதன் தாக்கத்தின் காரணமாக குறிப்பிட்ட இக் கடல் பிராந்தியங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இதேவேளை இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆகையினால் எதிர்வரும் 14 ம் திகதிவரையில் கடல் சார் ஊழியர்களும் மீனவ சமூகத்தினர்களும் ஆழ்கடல் பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், புத்தளம், கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய பெய்யக்கூடும்.

மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60_70 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்துவீசுவதுடன் அவ்வேளைகளில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

இதேவேளை, காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50_60 kmஇலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்துக் காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக்கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக் காணப்படும்.