நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பு! பொதுமக்கள் அவதானம்

Report Print Kanmani in காலநிலை

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்று சிரேஸ்ட வானிலை அதிகாரி தேசமானிய மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

இன்றைய வானிலை தொடர்பில் அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் மழை பெய்யக்கூடும் .

வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அத்துடன் திருகோணமலை, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்,மத்திய மலைப்பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும் மணித்தியாலத்திற்கு 50 km வேகத்திலான ஓரளவு பலத்த காற்று இடைக்கிடையே வீசக்கூடும்.

கடல் பிராந்தியங்களில்

நீர்கொழும்பு தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30_40 km வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.

மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50_60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்துவீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக்கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

இதேவேளை நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.