20 வருடங்களின் பின்னர் இலங்கையை தாக்கவுள்ள சூறாவளி

Report Print Vethu Vethu in காலநிலை
1986Shares

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த தாழமுக்கம் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து இன்று மாலை அல்லது இரவு சூறாவளியாக மாறும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சூறாவளி காரணமாக இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சூறாவளி இலங்கை ஊடாக பயணிக்கவுள்ளது. இதனால் நாடு முழுவதம் காற்று மற்றும் மழை ஏற்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

20 வருடங்களின் பின்னரே சூறாவளி ஒன்று இலங்கை ஊடாக பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறுதியாக 2000ஆம் ஆண்டு சூறாவளி ஒன்று பயணித்துள்ளது.

ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து நேற்று இரவு 11.30 மணிக்கு திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 460 கிலோ மீற்ற தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

இந்த தொகுதியான அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்த சூறாவளி மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவிற்கு இடையில் கிழக்கு கடற்கரை ஊடாக நாட்டிற்குள் நுழையவுள்ளது.

இதன் தாக்கம் காரணமாக கிழக்கு, வடக்கு, வட மத்திய, வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணத்தில் 200 மில்லி மீற்றர் வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இடைக்கிடையே 100 மில்லி மீற்றர் மழை பெய்ய கூடும்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணத்திலும் இடைக்கிடையே 80 - 100 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You May Like This Video