விடுக்கப்பட்டுள்ள சிகப்பு எச்சரிக்கை! முப்படையினரும் ஆயத்த நிலையில் ...

Report Print Kamel Kamel in காலநிலை
1172Shares

புரெவி சூறாவளியினால் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ள முப்படையினரையும் ஆயத்த நிலையில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

புரெவி சூறாவளி இன்று இலங்கையை கடக்க உள்ளதாக சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே சூறாவளியினால் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகளில் மக்களுக்கு உதவுவதற்காக முப்படையினரையும் ஆயத்தமாக இருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

You May Like This Video