முல்லைத்தீவில் சீரற்ற காலநிலை:பொதுமக்களின் இயல்பு நிலை பாதிப்பு

Report Print Mohan Mohan in காலநிலை
72Shares

முல்லைத்தீவில் இன்று அதிகாலை தொடக்கம் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பொதுமக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடற்தொழிலாளர்கள் கடலுக்கு செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று கனமழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் முல்லைத்தீவில் மீனவர்கள் இந்திய மீனவர்களின் ஊடுருவலை கண்டித்து இன்றைய தினத்தில் கடையடைப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்ததாலும், சீரற்ற காலநிலை காரணமாகவும் மாவட்டத்தின் பல பகுதிகள் முடங்கிக் காணப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.