இலங்கையின் வானிலையில் வடகிழக்கு பருவமழை நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சில நேரங்களில் மழை பெய்யும்.
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களில் ஒரு சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் கடல் பகுதியிலும் மழை மற்றும் காற்று வீசும் என்றும் வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளது.
You My Like This Video