பலபிட்டிய பிரதேசத்தில் பெய்த மீன் மழை - வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு

Report Print Vethu Vethu in காலநிலை
1096Shares

பிரதேசத்தில் பெய்த அடை மழையுடன் மீன்களும் விழுந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 8 மணியளவில் இந்த பிரதேசத்தில் மழையுடன் அதிகளவு மீன்களும் வானில் இருந்து விழுந்துள்ளது.

இவ்வாறு விழுந்த மீன்கள் அனைத்து மாது ஏரியில் விடுப்பதற்கு பிரதேச மக்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு உட்பட பல பகுதிகளில் பெய்து வரும் அடைமழை காரணமாக வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.

வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி ஆகிய பகுதிகளில் பல வீதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.