இலங்கைக்கு அருகில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள இடையூறு

Report Print Ajith Ajith in காலநிலை
501Shares

இலங்கைக்கு அருகில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள இடையூறு காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

அத்துடன் வடக்கு, கிழக்கு, வட மத்திய, வட மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணத்தில் சில நேரங்களில் காற்றின் வேகம் 40-50 கி.மீ வரை அதிகரித்து வீசும் என்றும் வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.