ஏதுமற்ற ஏதிலிகளாய்..! அரவணைக்காத நாடுகள்..! சவாலுக்கு முகம் கொடுத்துள்ள ஐ.நா

Report Print S.P. Thas S.P. Thas in உலகம்
228Shares

தொடர் உள்நாட்டுப் போரினால் எல்லாவற்றையும் இழந்தவர்களாக ஏதிலிகளாக அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் சிரியா, ஈராக் உட்பட ஆபிரிக்கா நாடுகளைச் சேர்ந்த 2,35,000 பேர்.

இந்நிலையில், லிபியாவில் கூடியிருக்கும் 2,35,000 அகதிகள் இத்தாலிக்கு செல்ல தயார் நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

லிபியாவின் ஆயிரத்து 770 கிலோமீட்டர் நீளமான கடற்கரை, பெருந்தொகையான அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு கடற்பயணம் மேற்கொள்ள மிகவும் ஏதுவானதாக உள்ளதாகவிருக்கின்றது.

எனினும் இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் என்பதே முக்கிய சவாலாக இருப்பதாகவும் லிபியாவுக்கான ஐக்கிய நாடுகள் பணிமனையின் பிரதிநிதி மார்டின் கெப்ளர் தெரிவித்தார்.

இவ்வாறு தொடர்ந்தும் அகதிகள் தஞ்சம் கோரி வேறு நாடுகளுக்கு கடல்மார்க்கமாக செல்லும் பொழுது, விபத்துக்களை எதிர் கொண்டு பல உயிர்களை இழந்துவருகின்றார்கள்.

உள்நாட்டுப் போரில் ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கு சமனாக கடலில் படகுகள் கவிழ்ந்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறான ஆபத்துக்கள் நிறைந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டாமென பல்வேறு நாடுகளும் அமைப்புக்களும் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

எனினும், அகதிகள் தங்கள் உயிரை எப்படியேனும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையோடு கடல்மார்க்கமாக தங்கள் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இதன் போது வளர்ச்சியடைந்த நாடுகள் அவர்களை பொறுப்பேற்காமல் கடலிலேயே அப்படியே வைத்திருப்பதும், திருப்பியனுப்புவதும் மனிதாபிமானமற்ற செயல் என சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுவருகின்றனர்.

இதற்கிடையில் அதிகரித்துவரும் அகதிகளின் எண்ணிக்கையால் இதனை சமாலிப்பதில் சிரமத்தினை எதிர் கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

Comments