ஆசிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடும் டொனால்ட் டர்ம்ப்

Report Print Vethu Vethu in உலகம்
2337Shares

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்காக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் பல நாடுகள் தொடர்பில் தனது கருத்தினை நேரடியாக அறிவித்துள்ளார்.தொலைபேசி அழைப்பு மற்றும டுவிட்டர் ஊடாகவே ட்ரம்ப் அறிவிப்புகளை விடுத்துள்ளார்.

பாகிஸ்தாஸ் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை தொடர்பு கொண்ட ட்ரம்ப் எச்சரித்துள்ளார். பாகிஸ்தான், அமெரிக்காவின் நட்பு நாடல்ல. பாகிஸ்தான் ஒசாமா பின்லாடனை மறைத்து வைத்திருந்ததாகவும், திறமையான அமெரிக்க சிவில் படையினரால் ஒசாமா வெளியே கொண்டு வரப்பட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தொடர்ந்து பாகிஸ்தானிற்கு பல பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதாகவும், அதன் பலனற்ற செயற்பாடெனவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை சீனா தொடர்பில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், சீனா, வடகொரியாவின் அணுஆயுத வேலைத்திட்டங்களுக்கு உதவி செய்ய கூடாது. தொடர்ந்து அவ்வாறு மேற்கொள்ளப்பட்டால். அதனை நிறுத்தும் முறை தனக்கு தெரியும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

தாய்வானுடன் அமெரிக்கா உறவை நெருக்கப்படுத்திக் கொள்வதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். குறித்த தீர்மானம் சீனாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சர்ச்சைகுரிய கதாபாத்திரமாகிய பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு, டொனால்ட் ட்ரம்ப் அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார். இதன் போது பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அந்த நாட்டில் போதைப்பொருளை கட்டுபடுத்துவதற்காக கடைபிடிக்கும் கொள்கையை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வது அவசியம் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Comments