அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டு நேரப்படி இன்று காலை 06.50 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடக்கு கலிபோர்னியா மாநிலத்தில் இருந்து 104 மைல் தொலைவில் கடலுக்கு அடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், ரிச்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளதாகவும், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ தொடர்பிலான தகவல்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.