92 வயது தாயை வீட்டு சிறையில் அடைத்து வைத்த மகனின் கொடூர செயல்..!

Report Print Vino in உலகம்
199Shares

சீனாவின் கியாங்சி மாகாணத்தில் 92 வயதுடைய மூதாட்டியை அவரது மகனும் மருமகளும் சேர்ந்து வீட்டு சிறையில் அடைத்து வைத்திருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஒரு சிறிய அறைக்குள் அந்த மூதாட்டியை வைத்து பூட்டி வைத்து விட்டு வெளியில் வரமுடியாத அளவிற்கு இரும்பு கம்பியினால் கதவினை தயாரித்துள்ளனர்.

குறித்த பாட்டிக்கு சரியான படுக்கை வசதி மற்றும் கழிவறை வசதி, உணவினை கூட அவரது மகன் செய்து கொடுக்கவில்லை என அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பாட்டி கடந்த சில வருடங்களாக இந்த சித்திரவத்தையினை அனுபவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று குறித்த பாட்டியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பாட்டியை சித்திரவதைக்குள்ளாக்கியமை தொடர்பில் கணவன் மனைவி இருவரிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments