றியாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது திடீர் ஏவுகணை தாக்குதல்!

Report Print Murali Murali in உலகம்

சவூதி அரேபியா - றியாதில் அமைந்துள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் மீது திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று இரவு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தாக்குதலில் உயிர்ச் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு யேமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர். தாக்குதலுக்கு பயன்படுத்திய ஏவுகணை யேமன் நாட்டு தயாரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யேமனில் உள்ள மறைவிடத்தில் இருந்து பாலிஸ்டிக் வகை ஏவுகணை ஒன்றை ரியாத் விமான நிலையம் குறிவைத்து கிளர்ச்சியாளர்கள் ஏவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஏவுகணையானது 500 கிலோ மீற்றர் தொலைவு தூரத்தை கடந்து வந்து றியாத் விமான நிலையத்தை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரசாங்கம் அண்மைக்காலமாக யேமனில் உள்ள போராட்டக் குழுக்களுக்கு எதிராக கடுமையான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், சவூதியின் தலைநகர் றியாத்தில் நேற்றிரவு விமான நிலையத்தை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.