மூன்றாம் உலகப்போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்!

Report Print Murali Murali in உலகம்

அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான மோதல் நீடிப்பதால் மூன்றாம் உலகப்போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுள்ளது.

இவ்வாறு 51 சதவீத வாய்ப்புகள் காணப்படுவதாக அமெரிக்க முன்னாள் இராணுவ தளபதிகள் தெரிவித்துள்ளனர். வடகொரியா தொடர் அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது.

இந்நிலையில், வடகொரியாவிற்கு பதிலடியாக அந்த நாட்டின் மீது இராணுவ நடவடிக்கை எடுப்போம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடகொரியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பானை அணு குண்டுகளை வீசி அழித்துவிடுவோம் என வடகொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதற்கு சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் மறைமுகமாக ஆதரவு அளித்து வருகின்றன. இந்நிலையில் எதிர்வரும் கோடை காலத்துக்கு முன்பாக அமெரிக்கா, வடகொரியா இடையே போர் ஏற்படுவதற்கு 51 சதவீத வாய்ப்புகள் உள்ளன.

எவ்வாயினும், இது மூன்றாம் உலகப்போராக வெடிக்கும் அபாயம் உள்ளது என அமெரிக்க இராணுவத்தின் ஓய்வு பெற்ற சிரேஸ்ட தளபதி ரிச்சர்ட் ஏங்கல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடகொரியாவுடன் போர் வெடித்தால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பது குறித்து அமெரிக்க இராணுவம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில், குறித்த பிரச்சினைக்கு வரும் கோடை காலத்துக்கு முன்னர் தீர்வு காணப்படும் என மற்றுமொரு ஓய்வுபெற்ற சிரேஸ்ட தளபதியான பேரி மெக்காப்ரே தெரிவித்துள்ளார்.