இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருவர் பலி

Report Print Evlina in உலகம்

இந்தோனேசியா ஜாவா தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 2பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், உயிருக்கு பயந்து மக்கள் வீதிகளிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர்.

சக்திவாய்ந்த நிலநடுக்கம் தொடர்பில் ஜாவாவின் கடற்கரையோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதை தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு பின்னர் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தில் 40இற்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் இடிந்து விழுந்துள்ளதாக தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இடிபாடுகளை அகற்றும் பணி தொடங்கினால் அதில் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என்ற விவரங்கள் தெடர்பில் தெரியவரும் என கூறப்படுகின்றது.

மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள டாசிக்மாலயா, பன்கன்ட்ரன் மற்றும் சியாமிஸ் பகுதிகளில் நிலநடுக்கம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நிலநடுக்கத்தால் பல வைத்தியசாலை கட்டிடங்கள் குலுங்கியுள்ளதுடன், நோயாளிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். நிலநடுக்கம் பீதியால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.