சர்ச்சைக்குரிய தென் சீன கடல்பகுதியில் பிரித்தானிய போர்க்கப்பல்!

Report Print Murali Murali in உலகம்

பிரித்தானியாவின் யுத்தக்கப்பல், சர்ச்சைக்குரிய தென் சீன கடல்பகுதியில் அடுத்தமாதம் பயணிக்க உள்ளதாக பிரித்தானிய இராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தென்சீன கடல்பகுதியில் எரிசக்தி ஆற்றல், கனிமவளங்கள், மீன்வள ஆதாரங்கள் அதிகமாக உள்ளன.

இந்த பகுதியில் உள்ள வளங்களுக்கு சீனா உரிமை கோர முடியாது என்று கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.

ஆனால், தங்களை எந்த உத்தரவும், தீர்ப்பும் பாதிக்காது என்று தீர்ப்பாயத்தின் உத்தரவை சீனா புறக்கணித்தது. அந்தப் பகுதியில் சீனா செயற்கையான தீவுகளை உருவாக்கியுள்ளது.

இதில் அமெரிக்க போர்க் கப்பல்கள் ரோந்து பணி மேற்கொண்டதால், சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், அடுத்த மாதம் பிரிட்டன் போர்க்கப்பல் தென்சீன கடல்பகுதியில் பயணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரித்தானியா இராணுவ அமைச்சர் கெவின் வில்லியம்சன் கருத்து தெரிவிக்கையில், “அடுத்த மாதத்தில் எச்.எம்.எஸ் சதர்லாண்ட் கப்பல் அவுஸ்திரேலியாவிற்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சீனாவின் எச்சரிக்கையை மீறி பிரித்தானியா கப்பல், தென்சீன கடல் பகுதியில் பயணித்தால், அங்கு மீண்டும் பதற்றம் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.