பயணிகள் விமானம் விழுந்து விபத்து! பலர் பலி

Report Print Murali Murali in உலகம்

நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் அமைந்துள்ள த்ரிபூவன் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்தில் பலர் உயரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் விமான ஊழியர்களுடன் சேர்த்து மொத்தம் 78 பேர் வரை பயணம் செய்துள்ளதாக காத்மாண்ட் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது வரையில் 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியில் நேபாள இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தினால் காத்மண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.