வடகொரிய ஜனாதிபதியை சந்திக்கும் அமெரிக்க ஜனாதிபதி: உறுதி செய்தார் ட்ரம்ப்

Report Print Murali Murali in உலகம்

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுக்கும், தனக்கும் இடையிலான சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெறும் என்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப், உறுதிசெய்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ,ந்த சந்திப்பு ஜூன் மாதம் 12ஆம் திகதி இடம்பெறும் என்று தனது டுவிட்டர் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இருவருக்கும் இடையிலான சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் அண்மை காலமாக கடுமையான முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த முறுகல் நிலை மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசவுள்ளனர்.

இந்நிலையில், ட்ரம்புடனான சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கு நல்ல எதிர்காலம் உருவாகும் எனவும் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.