அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 46 பேர் பலி

Report Print Murali Murali in உலகம்

சட்டவிரோதமான முறையில் ஏமன் கடல் பகுதியில் அகதிகளை அழைத்து சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 46 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் எத்தியோப்பிய நாட்டு அகதிகளை ஏற்றிச் சென்ற படகே விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த படகில் 100க்கு மேற்பட்ட அகதிகள் இருந்துள்ளதாகவும், அவர்களில் 83 ஆண்களும், 17 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகு ஏமன் அருகே வந்த போது கடல் கொந்தளிப்பு காரணமாக கடலில் மூழ்கியதில் 46 பேர் நீரில் மூழ்கினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புப் படையினர் மாயமான 16 அகதிகளை தேடி வருகின்றனர்