விமான நிலையத்தின் மீது தற்கொலை குண்டு தாக்குதல்! மயிரிழையில் உயிர் தப்பிய ஆப்கான் ஜனாதிபதி

Report Print Murali Murali in உலகம்

காபுல் விமான நிலையத்தின் மீது இன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஆப்கான் உப ஜனாதிபதி அப்துல் ரஷீட் தொஸ்தம் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டை விட்டு தானே வெளியேறி நிலையில், ஆப்கான் உப ஜனாதிபதி அப்துல் ரஷீட் தொஸ்தம் வெளிநாட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், அந்நாட்டு தலைநகர் காபூலிலுள்ள விமான நிலையத்தில் அவர் வந்திறங்கிய சிறிது நேரத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் 11 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் குறைந்தது 14 பேர் காயமடைந்துள்ளனர். அப்துல் ரஷீட் தொஸ்தம்ன் பாதுகாப்பு வாகனங்கள் விமான நிலையத்திலிருந்து வெளியேறிய சிறிது நேரத்தில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Latest Offers

loading...