அமெரிக்காவை மிரட்ட நினைக்காதீர்கள், விளைவு விபரீதமாக இருக்கும்! ட்ரம்ப் எச்சரிக்கை

Report Print Murali Murali in உலகம்

அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட ஈரானை மிரட்டும் தொனியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அந்த வகையில், அமெரிக்காவை மீண்டும் மிரட்ட நினைத்தால் வரலாறு முழுக்க சில நாடுகள் அடைந்த வேதனையை எதிர்கொள்ள நேரிடும் என ஈரான் ஜனாதிபதியை டொனால்ட் டிரம்ப் இன்று எச்சரித்துள்ளார்.

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருவதுடன், தனது நேச நாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றது.

இதனையடுத்து, சிங்கத்தின் வாலை பிடித்து விளையாட வேண்டாம் எனவும், அதன் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும் எனவும் ஈரான் அமெரிக்காவை எச்சரித்திருந்தது.

இந்நிலையிலேயே, அமெரிக்காவை மிரட்ட நினைக்க வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானை எச்சரித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

“மீண்டும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டாம். அப்படிச் செய்தால் இதுவரையில் வரலாற்றில் சந்திக்காத பின்னடைவைச் சந்திக்க நேரிடும். கசப்பான சம்பவங்களை அனுபவிக்க வேண்டி வரும்.

நாம் உங்களது எச்சரிக்கைகளுக்கு தலைகுனியும் நாடு அல்ல. வன்முறைக்கோ, மரணத்துக்கோ நாம் பயப்பட மாட்டோம்” என ட்ரம்ப் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.