பாலியல் தொல்லை முறைப்பாடு! ஐ.நா சபையின் சிரேஷ்ட பணியாளர் ஒருவர் தொடர்பில் வெளியான தகவல்

Report Print Murali Murali in உலகம்

ரவிகர்கரா (Ravi Karkara), ஐக்கிய நாடுகள் சபையின் சிரேஷ்டபணியாளர். தற்போது தான் பணிபுரிந்த பல நாடுகளில் தன் கீழ் பணிபுரிந்த ஊழியர்களுக்கு பாலியல்தொல்லைகள் கொடுத்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

அத்துடன் தற்போது ஐக்கிய நாடுகள் சபையினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்.

பிரித்தானிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லொயிட்ரஸ்ஸல் - மொயில்(Lloyd Russell-Moyle) தான் ரவிகார்க்காராவின் கீழ் பணியாற்றிய போது தான் ரவிகர்கராவினால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 31 வயதுடைய பெயர்குறிப்பிடவிரும்பாத பிரித்தானிய சர்வதேச அபிவிருத்திக் குழுவின் உறுப்பினர் ஒருவரும் தானும் ரவிகார்கரவினால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானதாகவும், பிரித்தானிய சர்வதேச அபிவிருத்திக்குழு கடந்த மாதம் சர்வதேச உதவி வழங்கும் நிறுவனங்களில் நடைபெறும் பாலியல் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமான அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான், துபாய் மற்றும் கென்யா போன்ற நாடுகளிருந்தும் ரவிகர்கரா மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பிரித்தானியாவிலிருந்து வெளிவரும் பிரபல நாளிதளான தி காடியன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

ரவிகர்கரா இவரே யுனிசெப்(UNICEF) நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையினைத் தாயாரித்திருந்தார்.

அத்தோடு இவர் மீதான இத்தகைய பாலியல் குற்றச்சாட்டுக்களினால் இவரால் தயாரிக்கப்பட்ட யுனிசெப் நிறுவனத்தின் அறிக்கை குறித்த நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.

இவர் ஏதோ ஒரு நாட்டினுடைய உந்துதலினால் கூட இலங்கை சம்பந்தமான யுனிசெப் அறிக்கையினை தயாரித்திருக்கலாம் என்றசந்தேகம் மேலோங்கியிருக்கிறது.

ஏனென்றால் 2007/08 காலப்பகுதியில் கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் வலுக்கட்டாயமாக சிறுவர்களைப் படையில் இணைத்ததாக யுனிசெப் நிறுவனத்தின் அறிக்கையில் குற்றம்சுமத்தியிருந்தார்.

ஆனால் 2007/08 காலப்பகுதியில் கிழக்கில் கருணாகுழுவின் செயற்பாடே மேலோங்கி இருந்ததென்பதும் நிதர்சனம். 2007/08 காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் வடபகுதி நோக்கி தங்களது செயற்பாட்டினை நகர்த்திக்கொண்டிருந்தனர்.

இக்காலப்பகுதியில் இந்திய அரசாங்கத்தின் அனுசரணையில் மனித உடல் உறுப்புக்கள் கடத்தலும் சிறுவர் துஷ்பிரயோகங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ரவிகர்கரா இலங்கையிலும் ஐக்கிய நாடுகள் சபையின் பல உதவி வழங்கும் நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறார். இதனால் இவர் தன் கீழ் பணிபுரிந்த ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருப்பதற்கான வாய்ப்புக்களுள்ளன.

ரவிகர்க்கராவினால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ யாரேனும் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகியிருந்தால் கீழ்க்காணப்படும் மின்னஞ்சல் முகவரியுடனோ அல்லது தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொண்டால் தங்களுக்கு நிவாரணம் பெற்றுத்தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அத்தோடு தங்களது பெயர் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: Humanrightstheuk@gmail.com

தொலைபேசி இலக்கம்: +447466183086

Latest Offers