உலகில் துருவங்கள் தலைகீழாக மாறும்! மனித இனத்திற்கு பேரழிவு விளையும் - நாசா எச்சரிக்கை

Report Print Shalini in உலகம்

உலகின் காந்த புலம் பற்றியும், உலகின் துருவங்கள் பற்றியும் நாசா தற்போது அதிர்ச்சியான செய்திகளை வெளியிட்டுள்ளது

நாசாவின் மேவன் (MAVEN - Mars Atmosphere and Volatile Evolution) விண்கலம் மூலம் உலகின் காந்த புலம் (Magnetic Field) பலவீனம் அடைந்து உள்ளதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன.

திரட்டப்பட்ட ஆதாரங்களின் மூலம் பூமியின் காந்த புலம் கடந்த 160 வருடங்களாக பலவீனம் அடைந்து கொண்டே வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் உலகின் துருவங்களான வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு ஆகியவைகள் தலைகீழாக மாறும் ஆபாயம் உள்ளதாகவும் நாசா எச்சரிததுள்ளது.

இவ்வாறு தலைகீழாக மாறும் துருவங்கள் மனித இனதிற்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.

காந்த புலம் சமப்படுத்துதல் மற்றும் காந்த முனைகள் தலைகீழாக புரட்டப்படும் சம்பவமானது, இன்னும் 1000 ஆண்டுகளில் நடக்கும். முக்கியமாக அடுத்த 100 ஆண்டுகளுக்குள் நடக்கும் என்று நாசா கணித்துள்ளது.

காந்த புலத்தின் பலவீனமானது பூமியின் திரவ வெளி மையத்தில் உள்ள இரும்பு அணுக்களை மறுசீரமைப்பு செய்யும் அதன் விளைவாக துருவங்கள் மாறும்.

மேலும் சில ஆய்வாளர்களின் ஆய்வின்படி உலகத்தின் துருவங்கள் மெல்ல மெல்ல தான் புரட்டப்படுமே இன்றி உடனடியாக புரட்டப்படாது என்றும் கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி உலக துருவாங்கள் தலைகீழாக மாறிய அடுத்த 200 ஆண்டுகளுக்கு பூமிக்கு காந்த புலமே இருக்காது. இதனால் பூமியில் உள்ள உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது உறுதியாகும்.

அப்படியாக சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு மற்றும் சூரிய வெடிப்பு, சூரிய காற்று மற்றும் சூரிய புயல் ஆகியவைகளை பூமி சந்திக்க நேரிடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 780,000 ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற சம்பவம் நிகழ்ந்து பூமியின் துருவங்கள் புரட்டப்பட்டிருந்தது என்றும் சில விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

மேலும் 41,000 ஆண்டுகளுக்கு முன்பு பனியுகத்தில் (Ice Age) நடந்த இதே போன்ற சம்பவம் தான் நியண்டர்தால் இனத்தையே அழித்துள்ளது என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.