விடுதலைக்கு எதிராக வாக்களித்த மக்கள்!

Report Print Thayalan Thayalan in உலகம்
விடுதலைக்கு எதிராக வாக்களித்த மக்கள்!

பிரான்ஸ் பசிபிக் பிராந்தியமான நியூ கலெடோனியாவில் உள்ள வாக்காளர்கள் சுதந்திரத்திற்கான முயற்சியை நிராகரித்துள்ளனர்.

வாக்களிப்பின் போது பெறப்பட்ட பகுதியளவிலான முடிவுகள் இந்த தீர்மானத்தை உறுதிப்படுத்தியுள்ளன.

பிரான்ஸிலிருந்து பிரிந்து தனிநாடாகச் சுதந்திரப் பிரகடனம் செய்வதற்கான பொதுவாக்கெடுப்பு புதிய கலெடோனியாவில் நடைபெற்றது.

1988 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தால் சுதந்திரம் பெறும் ஒரு வன்முறை பிரச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவே இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிராகரிப்பு பிரான்சின் குடியரசு ஆட்சியின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி இம்மானுவெல் மக்ரோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய கலெடோனியா நிக்கல் உலோகத்திற்கான பெரிய இருப்பாக உள்ளது. அது இலத்திரனியல் உற்பத்தித் துறையில் முக்கியமான அங்கமாக திகழ்கின்றது. பசுபிக் பிராந்தியத்தில் ஒரு மூலோபாய அரசியல் மற்றும் பொருளாதார சொத்தாக பிரான்ஸினால் பார்க்கப்படுகிறது.

பிரஞ்ச் பசிபிக் பகுதியில் உள்ள நியூ கலெடோனியா மக்கள் சுதந்திரத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

பிரான்ஸிலிருந்து விடுதலை பெற்று தனி நாடாக அரசமைக்கலாமா அல்லது பிரான்ஸின் ஆளுகையிலேயே இருக்கலாமா என்பதற்காக நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் 56.4 சதவீதம் பேர் பிரான்ஸின் ஆளுகையிலேயே இருக்கலாம் என்று வாக்களித்துள்ளனர்.

பிரிந்து சென்று தனி நாடு அமைக்கலாம் என்பதற்கு ஆதரவாக 43.6 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

Latest Offers