வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ள மகிழ்ச்சியான செய்தி!

Report Print Murali Murali in உலகம்

ஜப்பானுக்குள் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களை அனுமதிக்கும் புதிய சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.

இதன் மூலம், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் கட்டுமானம், விவசாயம் மற்றும் நர்சிங் துறையில் பெருமளவிலான வெளிநாட்டினர் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.

இதன் வாயிலாக மூன்று லட்சம் வெளிநாட்டினர் இத்துறைகளில் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அதே சமயம், இந்த அனுமதியினால் வருமானம் குறையக்கூடும், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படக்கூடும் என எதிர்க்கட்சி தரப்பு விமர்சித்திருக்கின்றது.

உலகளவில் வயதானவர்களை அதிகம் கொண்ட நாடாக உள்ள ஜப்பானில் சராசரி ஆயுள்காலம் 85.5 ஆக உள்ளது.

அத்துடன், இளம் தொழிலாளர்கள் மிகக்குறைவாக உள்ளமை அந்நாட்டின் மிகப்பிரச்னையாக இருந்து வரும் நிலையில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனுமதிக்கும் புதிய முறையின் பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

Latest Offers