மலேசியாவுக்குள் நுழைய 73,000 வெளிநாட்டினருக்கு தடை!

Report Print Murali Murali in உலகம்

மலேசிய குடிவரவுச் சட்டத்தின் அடிப்படையில் 73,000 வெளிநாட்டினர் மலேசியாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தடையை குடிவரவுத்துறையின் இயக்குனர் ஜெனரல் செரி முஸ்தபர் அலி உறுதிச் செய்துள்ளார்.

“இக்குற்றவாளிகள் நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக ‘Not To Land’ அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் நிலம், வான், கடல் வழியாக நுழைய முயற்சித்திருக்கின்றனர்” எனக் கூறியுள்ளார்.

இத்தடையில் மலேசியாவில் பல்வேறு விதமான குற்றங்களில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மாணவர்கள் என்ற பெயரில் வந்து எந்த முறையான ஆவணங்களின்றி சிக்கியவர்களும் உள்ளனர். “இல்லாத பெரிய கல்வி நிறுவனங்களில் படிப்பதாக கூட சில வெளிநாடினர் சொல்கின்றனர்.

போலி மற்றும் காலாவதியான கடவுச்சீட்டு கொண்டவர்களும் தடை செய்யப்பட்டுள்ளனர்” என கோலாலம்பூர் விமான நிலையத்தில் நடைபெற்ற குடிவரவு தினக் கொண்டாட்டத்தின் பிறகு பேசிய முஸ்தபர் அலி கூறியிருக்கிறார்.

குடிவரவுச் சட்டத்தின் படி, வேலைக்காக மலேசியாவுக்குள் வந்த வெளிநாட்டினரை தொழில் வழங்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 6 மணிநேரத்துக்குள் அழைத்துச் செல்ல வேண்டும்.

அப்படி அழைத்துக் கொள்ளப்படாத பட்சத்தில், மூன்று நாட்கள் வரை அவர்கள் காத்திருக்க அனுமதிக்கப்படும்.

அப்பொழுதும் வரவில்லையெனில் அவர்கள் சொந்த நாட்டுக்கே நாடுகடத்தப்படுவார்கள் என மலேசிய குடிவரவுத்துறை தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தாண்டு மலேசிய குடிவரவுத்துறை நடத்திய 15,000 தேடுதல் வேட்டைகளில் 46,000 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு மலேசிய குடிவரவுத்துறையினரின் பிடியில் 9,000 வெளிநாட்டினர் விரைவில் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers