தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 30 பேர் வரையில் பரிதாபமாக பலி!

Report Print Murali Murali in உலகம்

ஆப்கானி்தானில் தங்கம் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 30 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள படாக்‌ஷான் மாகாணத்துக்குட்பட்ட கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் அரசின் அனுமதி பெறாது சொந்தமாக சுரங்கம் வெட்டி தங்கம் சேகரிக்கும் பணியில் அந்த பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சுமார் 200 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட ஒரு சுரங்கம் ஒன்றில் சிலர் இன்று பணியாற்றி கொண்டிருந்த போது, குறித்த தங்கச் சுரங்கம் திடீரென சரிந்து விழுந்தது.

இந்த விபத்து தொடர்பான தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். அதற்குள் களமிறங்கிய உள்ளூர் மக்கள், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 30 பேரின் உடல்களை மீட்டனர்.

இந்நிலையில், தொடர்ந்தும் அந்த பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers