மனித கடத்தலில் சிக்கிய பல பெண்கள் மலேசியாவில் மீட்பு!

Report Print Murali Murali in உலகம்

மலேசியாவின் பஹாங் மாநிலத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை ஒன்றில், மனித கடத்தலில் சிக்கிய 17 தாய்லாந்து பெண்கள் ஒரு பொழுதுபோக்கு மையத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த 17 பெண்களும் உபசரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதில் 21 முதல் 36 வயது பெண்கள் உள்ளதாக மாநில குற்றப் புலனாய்வு துறையின் தலைமை அதிகாரி ஓத்மன் நயன் தெரிவித்திருக்கிறார்.

மேலும் இந்த தேடுதல் வேட்டையில், அந்த பொழுதுபோக்கு மையத்தின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இம்மையத்தின் மேலாளராக கருதப்படும் 32 வயதுடைய உள்ளூர் நபர் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த குறிப்பிட்ட தேடுதல் வேட்டை பொழுதுபோக்கு மையங்களின் தொழிலுக்கு தொல்லைகொடுக்கும் விதமாக நடத்தப்படவில்லை.

மாறாக சமூக பிரச்னையாக உள்ள மனித கடத்தலை தடுக்கும் விதமாக நடத்தப்பட்டதாக பஹாங் மாநில குற்றப் புலனாய்வு துறையின் தலைமை அதிகாரி ஓத்மன் நயன் குறிப்பிட்டு இருக்கிறார்.

Latest Offers