வெளிநாடு ஒன்றில் கொடூர தாக்குதல்! 100க்கும் மேற்பட்ட படையினர் பரிதாபமாக பலி

Report Print Murali Murali in உலகம்

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலொன்றில் 100க்கும் மேற்பட்ட ஆப்கான் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ பயிற்சி முகாமிற்குள் இடம்பெற்ற குண்டுவெடிப்பு காரணமாக விசேட படையினர் 8 பேர் உள்ளடங்களாக 126 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

மைடன் வர்டாக் பிராந்தியத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இராணுவசோதனை சாவடி மீது காரை மோதி தாக்குதலை ஆரம்பித்த தீவிரவாதிகள் பின்னர் இராணுவ பயிற்சி தளத்தின் முக்கிய கட்டிடம் மீது மற்றொரு காரை மோதி தாக்குதலை மேற்கொண்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டுதாக்குதல் இடம்பெற்ற பின்னர் உள்ளே நுழைந்த இரு துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஆப்கான் படையினர் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், கொல்லப்பட்டவர்களின் உண்மையான விபரங்களை ஆப்கானிஸ்தான் அரசாங்கம் மறைப்பதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.