அணை உடைந்து 9 பேர் பலி - 300 பேர் மாயம்! பிரேசிலில் சம்பவம்

Report Print Murali Murali in உலகம்

பிரேசில் நாட்டில்அணை உடைந்து 9 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்ததோடு 300 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், காணாமல் போனவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் புரு மாடின்கோ நகரத்தின் அருகே ஒரு தனியாருக்கு சொந்தமான இரும்புதாது சுரங்கம் ஒன்றில் அணை ஒன்று பயன்படுத்தப்படாமல் இருந்தது.

நேற்று இரவு அந்த சுரங்கத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென அந்த அணை உடைந்தது. இதனால் அதில் இருந்த தண்ணீரும், சேறும் வெள்ளமாக பெருக்கெடுத்து வெளியேறியது.

இச்சம்பவத்தில் இரும்புதாது சுரங்கத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் அவர்கள் தவிர 300 பேர் வரையில் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில், அவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Latest Offers