இந்தோனேசியாவில் சுமார் 200 குடியேறிகள் கைது!

Report Print Murali Murali in உலகம்
140Shares

இந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமாத்ரா மாகாணத்தின் தலைநகரான மேடானில் ஒரு வீட்டிலிருந்து வங்கதேசத்தைச் சேர்ந்த சுமார் 200 சட்டவிரோத குடியேறிகள் அந்நாட்டு பொலிஸாரினால் கண்டறியப்பட்டுள்ளனர்.

உள்ளூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இரண்டடுக்கு கட்டடம் ஒன்றில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், 192 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருமே 30 வயதுக்கும் கீழுள்ள ஆண்கள் எனத் தெரியவந்துள்ளது. இந்த குடியேறிகள் உணவின்றி பல நாட்கள் தவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வங்கதேசத்தைச் சேர்ந்த இவர்கள் மலேசியாவுக்கு வேலைக்கு செல்லும் நோக்கத்துடன் வந்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. “இவர்கள் படகு வழியாக வந்திருக்கக்கூடும் என எண்ணுகிறோம்.

ஏனெனில் இவர்களிடம் எந்த ஆவணங்களும் கிடையாது,” என மேடான் நகர குடிவரவுத்துறை அதிகாரி பெர்ரி மோனங் ஷிஹிடே குறிப்பிட்டிருக்கிறார்.

இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையிலும், இவர்களை நாடுகடத்தப்படுவது தொடர்பான முடிவு பின்னர் எடுக்கப்பட்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

சமீப ஆண்டுகளில், ஆப்கானிஸ்தான், மியான்மர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான தஞ்சக்கோரிக்கையாளர்கள் இந்தோனேசியாவின் சுமாத்ரா பகுதியில் படகு வழியே தஞ்சமடைந்திருக்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.