நியூசிலாந்து தாக்குதல் சம்பவம்! சந்தேகநபர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Report Print Murali Murali in உலகம்

நியூசிலாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை தடுப்பு காவலில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, குறித்த நபரை எதிர்வரும் 5ம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், அன்றைய தினம் வழக்கை மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானித்துள்ளது.

நியூசிலாந்து Christchurch பகுதியில் உள்ள பள்ளிவாசலில் நேற்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அந்நாட்டு நேரப்படி நேற்று மத்தியம் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் 49 பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தனர். குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து நியூசிலாந்தில் குடியேறிவர்கள் பலர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய நாட்டை சேர்ந்த 28 வயதான பிரென்டன் டர்ரன்ட் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, சந்தேகநபரை எதிர்வரும் ஐந்தாம் திகதி வரையில் தடுப்பு காவலில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் கருத்து தெரிவிக்கையில், “சந்தேகநபரான பிரென்டன் டர்ரன்ட் முன்னரே துப்பாக்கி உரிமத்தை பெற்றிருந்தார்.

எனினும், அவர் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து ஐந்து துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நியூசிலாந்தின் துப்பாக்கி பயன்பாட்டு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக” கூறியுள்ளார்.

Latest Offers