நியூசிலாந்தை தொடர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் துப்பாக்கிச் சூடு! மூவர் பலி - பலரின் நிலை கவலைக்கிடம்

Report Print Murali Murali in உலகம்

நெதர்லாந்து யூட்ரெக்ட் நகரத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், இந்த சம்பவத்தில் காயமடைந்த ஒன்பது பேர் கவலைக்கிடமான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

24 Oktoberplein எனும் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில். சம்பவம் தொடர்பில் துருக்கி நாட்டை சேர்ந்த ஒருவரை அந்நாட்டு பொலிஸார் தேடி வருகின்றனர்.

அத்துடன், தாக்குதலை மேற்கொண்ட நபர் காரில் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை யாரும் நெருங்க வேண்டாம் எனவும் பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.

இதனிடையே, சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு மூன்று ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அவசர சேவைகளும் வரவழைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நியூசிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 49 பேர் வரையில் கொல்லப்பட்டிருந்த நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers