மியான்மர் தொழிலாளர்கள் பலரை நாடு கடத்துகின்றது தாய்லாந்து அரசு!

Report Print Murali Murali in உலகம்

தாய்லாந்தில் விசா காலம் முடிந்த பின்னரும் தொடர்ந்து பணியாற்றி வந்த 60க்கும் மேற்பட்ட மியான்மர் தொழிலாளர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

மியான்மருக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான ஏற்பாட்டின் கீழ், இவர்கள் மியான்மருக்கு திரும்பியுள்ளதாக மியான்மர் தொழில் மற்றும் குடிவரவுத்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, சட்டவிரோதமாக பணியாற்றி வந்ததாக 7 பெண்கள் உள்பட சுமார் 60 மியான்மரிகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கு அபராதம் மட்டுமின்றி தாய்லாந்து சட்ட நடைமுறையின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, அவர்கள் கவ்தொய்ங் (Kawthoung) எல்லையில் மியான்மர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மியான்மர் அமைச்சக தகவலின் படி, ஜனவரி 1 மற்றும் மார்ச் 11 இடையிலான காலக்கட்டத்தில் தாய்லாந்தில் சட்டவிரோதமாக இருந்து வந்த 428 மியான்மரிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மியான்மரின் தனின்தர்யி(Tanintharyi), யங்கூன்(Yangon), பகோ(Bago), அய்யவாடி( Ayayawaddy) மற்றும் ரக்ஹைன்(Rakhine) மாநிலங்களை சேர்ந்த பலர் இதில் அதிகபட்சமாக இருக்கின்றனர்.

தாய்லாந்துக்கு இடம்பெயரும் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் மீன்பிடி, கட்டுமானம், ஆடை உற்பத்தி துறையிலேயே பெரும்பான்மையாக பணியாற்றுகின்கறனர்.

Latest Offers