மலேசியாவில் 100 சட்டவிரோத குடியேறிகள் கைது!

Report Print Murali Murali in உலகம்

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே குடிவரவுத்துறை நடத்திய திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு இந்தியர்கள் உள்ளிட்ட சுமார் 100 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்தேடுதல் வேட்டை கோலாலம்பூருக்கு மிக அருகாமையில் உள்ள பேட்டலிங் ஜெயா என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதில் 94 இந்தோனேஷியர்கள், இரண்டு இந்தியர்கள், இரண்டு பாகிஸ்தானியர்கள், ஒரு கம்போடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ள சிலாங்கூர் குடிவரவுத்துறையின் இயக்குனர் முகமது சுக்ரி நவி,

இந்த தேடுதல் வேட்டையில் 76 அதிகாரிகள் ஈடுபட்டதாகவும், பொதுவான புகார்களின் அடிப்படையிலும் உளவுத்துறையின் தகவலின் அடிப்படையிலும் இத்தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.

கடந்த 31ம் திகதி அதிகாலை 12.45 தொடங்கப்பட்ட தேடுதல் வேட்டை 2.30 மணிக்கு நிறைவடைந்தது.

180 வெளிநாட்டினர் பரிசோதிக்கப்பட்டதில் குடிவரவுத்துறை அதொடர்பான குற்றங்களில் 100 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்,” என சுக்ரி நவி தெரிவித்திருக்கிறார்.

இதில் கைது செய்யப்பட்ட அனைவரும் குடிவரவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers