மோடி மீண்டும் பிரதமராவதே இம்ரான்கானின் விருப்பம்

Report Print Thayalan Thayalan in உலகம்
மோடி மீண்டும் பிரதமராவதே இம்ரான்கானின் விருப்பம்

இந்திய பிரதமராக நரேந்திரமோடி மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் காஸ்மீர் விவகாரத்திற்கு ஏதாவது ஒரு தீர்வை காணலாம் என பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்

வலதுசாரி கட்சியான பாஜக வெற்றிபெற்றால் காஸ்மீர் விவகாரத்திற்கு ஏதாவது ஒரு தீர்வை காணலாம் என இம்ரான் கான் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்

காஸ்மீர் தொடர்பில் தீர்வு காணப்பட்டால் அது பிராந்தியத்திற்கு மிகப்பெரிய விடயமாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இந்தியாவும் பாக்கிஸ்தானும் காஸ்மீர் தொடர்பில் தீர்வை காணமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இந்திய பிரதமரிற்கும் இந்திய மக்களிற்கும் என்ன செய்தியை தெரிவிக்க விரும்புகின்றீர்கள் என்ற கேள்விக்கு காஸ்மீர் விவகாரத்திற்கு தீர்வை காணவேண்டும் அது நீடிப்பதற்கு அனுமதிக்க முடியாது என்பதே எனது செய்தி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை இரு நாடுகளிற்கும் இடையிலான மோதல் ஆபத்து குறித்தும் இம்ரான்கான் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா மீண்டும் வந்து பாக்கிஸ்தானை தாக்கினால் பாக்கிஸ்தானிற்கு திருப்பிதாக்குவதை தவிரவேறு வழியில்லை என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்

Latest Offers