மலேசியா தப்பிச் செல்ல முற்பட்ட 100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள்!

Report Print Murali Murali in உலகம்

பங்களாதேஷில் இருந்து மீன்பிடி படகுகள் வழியாக மலேசியாவுக்கு செல்ல முயன்ற 115 ரோஹிங்கியா அகதிகளை அந்நாட்டு பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பங்களாதேஷ் - மியான்மர் எல்லை அருகே உள்ள குட்டுபலோங் முகாமில் வசித்து வந்த ரோஹிங்கியா அகதிகள் வங்காள விரிகுடா கடல் வழியாக மலேசியா செல்ல முயன்றுள்ளனர்.

கடந்த 5ம் திகதி மாலை இந்த அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டதாக பங்களாதேஷ் தரப்பு தெரிவித்திருக்கின்றது. “15 ஆட்டோ ரிக்சாக்களில் வந்த 50 ஆண்கள், 39 பெண்கள், 26 குழந்தைகளை நாங்கள் தடுத்து நிறுத்தினோம்.

ஆனால், இதில் எந்த ஆட்கடத்தல்காரர்களும் சிக்கவில்லை,” என பங்களாதேஷ் பொலிஸ் அதிகாரி அன்வர் ஹூசைன் தெரிவித்திருக்கிறார்.

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக மலேசியா மற்றும் தாய்லாந்துக்கு சென்றடைய ரோஹிங்கியா அகதிகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

இப்படி கடந்த மூன்று மாதங்களில் 300க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் கடந்த 3ம் திகதி மலேசியா செல்ல முயன்ற 27 ரோஹிங்கியா அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

மியான்மரில் ரோஹிங்கியா அகதிகளுக்கு எதிராக நிலவி வரும் சூழல் காரணமாக, சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் பங்காளதேஷில் தஞ்சமடைந்து, நெருக்கடியான சூழ்நிலைக்குள் வாழ்ந்து வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Latest Offers