மலேசியாவிலிருந்து தப்ப முயன்ற 12 சட்டவிரோத குடியேறிகள் கைது!

Report Print Murali Murali in உலகம்

மலேசியாவின் பெனாங்கு மாநிலத்தில் உள்ள சுங்காய் திராம் (Sungai Tiram) பகுதியில் இருந்த 12 சட்டவிரோத குடியேறிகள், சட்டவிரோதமாக மலேசியாவை விட்டு வெளியேற முயன்ற போது அவர்களை கடலோர காவல்துறை கைது செய்திருக்கிறது.

இதில் கைது செய்யப்பட்ட குடியேறிகள் அனைவரும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள். அதில் 9 பெண்களும் 3 ஆண்களூம் இருந்ததாக கடலோர காவல்துறை தளபதி பால் கிஹூ கோன் சியாங் தெரிவித்திருக்கிறார்.

தப்பியோட முயன்ற குடியேறிகளை 30 நிமிடங்கள் துரத்தி பிடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதில் சிலர் மாங்குரோவ் புதர்களும் குதித்து தப்பியுள்ளனர்.

சுங்காய் திராம் பகுதியிலிருந்து ஜோஹோர் மாநிலத்தில் உள்ள டன்ஜூங் லாங்சட் (Tanjsung Langsat) பகுதி வழியாக குடியேறிகள் தப்ப முயன்ற போது அவர்கள் கோங் கோங் பகுதியருகே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற ஆட்கடத்தல் முயற்சிகளை மலேசிய எல்லைகளில் தடுக்க கடலோர காவல்துறை தனது ரோந்து நடவடிக்கையை தீவிரப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers