இலங்கையை தொடர்ந்து இந்தியா மற்றும் பங்களாதேஷில் தாக்குதல்! ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை

Report Print Murali Murali in உலகம்

இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் தாக்குதல் நடத்தப்படும் என ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பங்களாதேஷ் - டாக்கா நகரில் அமைந்துள்ள திரையரங்கிற்கு அருகில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து, தாக்குதல் சம்பவம் குறித்து அந்த அமைப்பு இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

“பழிவாங்கும் எண்ணமுடைய தமது நோக்கத்தை ஒருபோதும் அழிக்க முடியாது என அந்த அமைப்பு வங்காளம், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள டாக்கா நகரின் மெட்ரோபொலிட்டன் பொலிஸ் தலைமையதிகாரி, “இந்த எச்சரிக்கையினை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய தெளஹீத் ஜமாத் என்ற உள்ளூர் அமைப்பு கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் தொடர் தற்கொலை தாக்குதலை நடத்தியிருந்தது.

இந்த தாக்குதலின் பின்னர் அந்த அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கையினை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் கடந்த 21ம் திகதி ஐ.எஸ் அமைப்பு நடத்தியிருந்த தொடர் தற்கொலை குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers