ஐ.எஸ்.ஐ.எல்.கே பயங்கரவாத அமைப்புக்கு ஐ.நா தடை!

Report Print Murali Murali in உலகம்

ஐ.எஸ். இயக்கத்தின் தெற்கு ஆசிய கிளை என்று அழைக்கப்படும் ஐ.எஸ்.ஐ.எல்.கே என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தடை விதித்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு, பாகிஸ்தானை சேர்ந்த தெரிக் இ தலீபான் இயக்கத்தின் முன்னாள் தளபதியால் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்த அமைப்பு நடத்திய பயங்கரவாத தாக்குதல்களில் 150 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையிலேயே, குறித்த அமைப்பிற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.