தைவானில் தலைமறைவான சுமார் 500 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்

Report Print Murali Murali in உலகம்

தைவானின் வடகிழக்கு பகுதியில் உள்ள யிலான் பகுதியிலிருந்த சுமார் 500 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

கடந்த ஆண்டு முதல் இவர்களை காணவில்லை எனக்கூறப்படும் நிலையில், இவர்கள் பொதுப் பாதுகாப்புக்கு ஆபத்தாக மாறக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

தைவானின் பணிச் சேவைகள் சட்டத்தின் படி, புலம்பெயர்ந்த ஒரு வெளிநாட்டுத் தொழிலாளர் வேலைக்கு செல்லாமல் தலைமறைவாகியிருந்தால், மூன்று நாட்களுக்குப் பிறகு தப்பியோடியவராக அறிவிக்கப்படுவார்.

இந்த வகையில், கடந்த 2018ல் 476 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தலைமறைவாகியுள்ளனர். இதில் பெரும்பான்மையானோர் இந்தோனேசியா மற்றும் வியாட்நாமைச் சேர்நதவர்கள் எனப்படுகின்றது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்திலிருந்து தப்பியோட பல காரணங்கள் இருக்கலாம் எனக் கூறியிருக்கும் யிலான் பகுதியின் தொழிலாளர் விவகாரங்கள் துறையின் தலைவர் யூ சிஹ்-ஹங்,

“அவர்களது நாட்டவர்களால் அவர்கள் வெளியேற வற்புறுத்தப்பட்டிருக்கலாம், சீக்கிரமாக பணம் சம்பாதிக்க அவர்கள் நினைத்திருக்கலாம். அதே சமயம், சிலர் துன்புறுத்தப்பட்டிருக்கலாம் அல்லது மனித கடத்தல் கும்பலால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம்,” என்றும் தெரிவித்திருக்கிறார்.

தொழிலாளர் விவகாரங்கள் துறையின் கூட்டத்தில் பேசிய உள்ளூர் அரசியல்வாதி லின் சிஹ்-ஷன், தலைமறைவானவர்கள் கள்ளச்சந்தைகளில் பணியாற்ற வாய்ப்புகளுண்டு என்றும் அவர்களில் சிலர் திருடர்களாக உள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இவ்வாறான தலைமறைவுகளை தடுப்பதற்கான நடவடிக்கையினை தொழிலாளர் விவகாரங்கள் துறை மேற்கொள்ளும் என அத்துறையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers