நீதிமன்ற விசாரணையின் போது எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி உயிரிழப்பு!

Report Print Murali Murali in உலகம்

எகிப்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் மோர்சி நீதிமன்றத்தில் வைத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை கொலைசெய்தாகக் கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விவாதத்தின் போது குற்றவாளிக்கூண்டிலிருந்த அவர் மயக்கமடைந்து விழுந்துள்ளார்.

இதனை அடுத்து அவர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொஹமட் மோர்சி 2013ம் ஆண்டு ஜூலை மாதம் அவரின் ஆட்சி இராணுவத்தால் கவிழ்க்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து அவரது கட்சியான முஸ்லிம் பிரதர்வுட் தடைசெய்யப்பட்டதுடன், அதன் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை, 2011ம் ஆண்டு எகிப்தில் இடம்பெற்ற சிறைத்தகர்ப்பு சம்பவம் தொடர்பில் மொஹமட் முர்சிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.