கடத்தல் வழக்குகளில் 6 மாதங்களில் 2,129 பேர் கைது

Report Print Murali Murali in உலகம்

ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாதக் காலத்தில் கடத்தல் வேலைகளில் ஈடுபட்ட 2,129 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 171.23 மில்லியன் மலேசிய ரிங்க்ட் (1 ரிங்கட்= 16 இந்திய ரூபாய்) மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மலேசிய உள்ளக பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கின் மூன்று முக்கிய பிரிவுகளான பொது நடவடிக்கைகள் படை, கடலோர காவல்துறை மற்றும் சிறப்புஉளவு மற்றும் விசாரணை பிரிவு ஆகியவை கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் ஈடுபட்டதாக அதன் இயக்குனர் இயக்குனர் அசிரல் சனி தெரிவித்துள்ளார்.

“பொது நடவடிக்கைகள் படை பெரும்பாலும் சட்டவிரோத குடியேறிகளை தடுப்பதிலும், வரிகள் கட்டாத பொருட்களை கைப்பற்றுவதிலும் ஈடுபடும். கடலோர காவல்துறை சிகரெட், மது மற்றும் பெட்ரோல் கடத்தலை தடுப்பதில் ஈடுபடும்,” என அசிரல் சனி குறிப்பிட்டிருக்கிறார்.

மலேசியாவில் கடத்தல் மற்றும் சட்டவிரோத குடியேறிகளை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அவர் கூறியிருக்கிறார்.

கடந்த ஜூலை 1 அன்று சட்டவிரோத குடியேறிகளாக கருதுப்படுபவர்களை கைது செய்ய நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், 50 குடியேறிகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் மியான்மர், சீனா, வங்கதேசம் நாடுகளை சேர்ந்தவர்கள் என கோலாலம்பூர் குடிவரவுத்துறை இயக்குனர் ஹமிதி ஏடம் உறுதி செய்துள்ளார்.